Sunday, July 28, 2013

மஹாபாரதம் - கும்பகோணப் பதிப்பு

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவராலேயே சரி பார்ப்பது பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.
ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கும்போது இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும்.
விலை ரூ.5000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.
ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம்.

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரை பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எப்படிச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு  அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன். 

இந்தப் பதிப்பின் தமிழ் நடை எளிமையானது. ஓரளவு படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்காது. அதிக பட்சம் நான்கிலிருந்து ஐந்து சமஸ்கிருதச் சொற்கள் ஒரு பக்கத்தில் இருக்கும். http://tamilvu.org என்ற தளத்தில் இலவசமாக உள்ள சென்னை தமிழ்ப் பல்கலைக் கழக அகராதியை வைத்து இவற்றின் பொருளை அறிந்து கொள்ளலாம். இந்தப் பதிப்பின் தமிழ் நடையைப் பற்றிய சந்தேகம் உள்ளவர்கள் சபா பர்வத்திலிருந்து வரும் அத்தியாயத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்

Monday, August 25, 2008

அஉஅஇஉஅஇஉ

நன்னூல்

எழுத்திலக்கணம்

1) எண் 2)பெயர் 3) முறை 4) பிறப்பு 5) உருவம் 6) மாத்திரை 7) முதல் நிலை 8) கடை நிலை 9) இடை நிலை 10)போலி 11) பதம் 12) புணர்ச்சி

ஆகிய பன்னிரு பகுதிகளைக் கொண்டது எழுத்திலக்கணம்.

1 - 10 - எழுத்தின் அகத்திலக்கணம் - எழுத்தியல்
11 - 12 - எழுத்தின் புறத்திலக்கணம் - பதவியல் , புணரியல்(உயிரீற்று, மெய்யீற்று, உருபீற்று)


1) எண்

மொழிக்கு முதல் காரணமும் அணுத்திரளின் காரியமுமாகிய ஒலியே எழுத்து எனப்படும்.

முதல் எழுத்து, சார்பெழுத்து என இரு வகைப்படும்.


முதல் எழுத்து
உயிர் - 12
மெய் - 18
மொத்தம் - 30

சார்பெழுத்து
1) உயிர்மெய்(216) 2) ஆயுதம்(8) 3) உயிரளபெடை(21) 4) ஒற்றளபெடை(42) 5) குற்றியலிகரம்(37) 6) குற்றியலுகரம்(36) 7)ஐகாரக்குறுக்கம்(3)
8)ஔகாரக்குறுக்கம் (1) 9) மகரக்குறுக்கம்(3) 10) ஆய்தக் குறுக்கம்(2) (369)


2) பெயர்

1) இடுகுறிப் பெயர் 2) காரணப் பெயர்

1) பொதுப் பெயர் 2) சிறப்புப் பெயர்

மரம் - இடுகுறி பொதுப் பெயர்
மா, பலா - இடுகுறி சிறப்புப் பெயர்


அ- ஔ - உயிர் எழுத்துகள் (12) க் - ன் - மெய் எழுத்துகள்(18)

அ, இ, உ, எ, ஒ - குறில்(5) ஆஈஊஏஓஐஔ - நெடில் (7)


அ, இ, உ - சுட்டு

எ, யா - மொழி முதல் வினா ஆ, ஓ - மொழி இறுதி ஏ - இருவழி

க,ச,ட,த,ப,ற - வல்லினம் ங, ஞ, ண, ந, ம, ன - மெல்லினம் ய, ர, ல, வ, ழ, ள - இடையினம்

Sunday, May 11, 2008

இந்த அமைப்பு தமிழ் வாழ உருவாக்கப்பட்டது.